Skip to main content

தமிழ் கலாச்சாரம் குறித்து கமல்ஹாசன் குரல் பதிவு ஐடியா எப்படி ஏற்பட்டது?-விக்னேஷ் சிவன் பேட்டி!

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

NN

 

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்கியது.  ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்கொண்ட நிலையில், இதுகுறித்து விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசுகையில்,  ''இது கண்டிப்பாக டீம் ஒர்க் தான். அரசு அலுவலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாரும் சேர்ந்து பார்த்து பெருமைப்படக்கூடிய நிகழ்வாக இருக்கணும் என எல்லாருடைய இன்டக்ஷனும் இருந்தது. அதனால் ரொம்ப பர்ஃபெக்ட்டா இதை செய்வதற்கு சப்போர்ட் செய்தார்கள். இதற்கான ஸ்கிரிப்ட்ட நாங்கள் கொடுக்கும்போதே பாராட்டினார்கள். ஃபைனலாக இன்னைக்கு தான் லைட்டிங் ஓட பார்த்திருக்கிறார்கள். முதலில் 45 நிமிடம் இந்த ஸ்கிரிப்ட் வந்தது.  45 நிமிடம் செயல்படுத்த முடியாது என்பதால் பலர் வேலை செய்து இதை ஷார்ட் பண்ணி கொடுத்தார்கள்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்  ஒருவர் தமிழ் கலாச்சாரம் குறித்து கமலஹாசன் குரல் பதிவு ஐடியா எப்படி ஏற்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

 

''குரூப் டிஸ்கஷனில் நாங்கள் முதலிலேயே கமல் சார் பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அதன் அடிப்படையில் இந்த நிகழ்ந்தது. எத்தனையோ நாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா அவர்களுக்கு நம்ம நாட்டினுடைய கலாச்சாரம், சிவிலைஷேசன் தெரிய வேண்டும் என்பதற்காக மேலும் அதை விஷ்வலாக கன்வே பண்ண வேண்டும் என்பதற்காக 3டி மேப்பிங் உள்ளிட்ட டெக்னாலஜிகளை முதல் முறையாக நாம் இந்தியாவில் யூஸ் பண்ணி இருக்கோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்