Advertisment

மத்தவங்களை பற்றி சேரன் கவலைப்பட மாட்டார்...பார்த்திபன் அதிரடி பேச்சு!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒத்த செருப்பு படம் குறித்து ஒரு இணைய ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குனர் சேரனை பற்றி பார்த்திபனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த பார்த்திபன், சேரன் ஒரு சின்சியரான இயக்குனர். அவர் மற்றவர்கள் காயப்படுவதை பற்றி கவலைப்பட மாட்டார் என்று கூறினார்.

Advertisment

parthiban

மேலும் அவருடைய பாரதிகண்ணம்மா படம் ஜாதி ஒழிப்பு பற்றி சமூகத்தில் அதிகமாக பேசப்பட்ட படம். அந்த படம் எடுக்கும் போது படம் ரொம்ப சீரியசாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் அந்த படத்தில் நானும், வடிவேலும் வேறு ஒரு படத்திற்காக இருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம். ஆனால் அதற்கு சேரன் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் கொடுத்த ஐடியா ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்றால், அவருக்கு பெயர் கிடைக்காது என சேரன் நினைத்தார். இதனால் அவர் அந்த காமெடி காட்சிகளை படத்தில் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் எல்லாம் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம். அதன் பின்பு வெற்றிகொடிக்கட்டு படத்தில் காமெடி சீன்ஸ் உருவாக்கி என்னையும், வடிவேலையும் நடிக்க வைத்தார். அந்த அளவுக்கு ரொம்ப சின்சியரான இயக்குனர் மற்றும் மனிதர் என்றும் கூறினார். மேலும் ஒத்தசெருப்பு படத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை என்று கூறினார். ஆகையால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன் நடவடிக்கைகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisment
actor big boss cheran parthiban Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe