62,000 சதுர அடி பரப்பளவு கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அனுமதியைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.
நிர்வாகம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி ஏற்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த விரிவாக்க பணிகளுக்காக நீர் நிலை, நீரோட்டம் சார்ந்த பகுதிகளில் விரிவாக்கம் செய்யக்கூடாது, மரங்களை வெட்ட அனுமதியில்லை, அருகில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 18 நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.