Advertisment

பெண்ணிடம் ஆபாசப் பேட்டி! - மூவர் கைது!

chennal talk youtube chennal police arrested

பெண்ணிடம் ஆபாசமாகப் பேட்டி எடுத்ததாக யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Advertisment

'சென்னை டாக்' (Chennai Talk) என்ற யூ-ட்யூப் சேனலில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து இந்த வீடியோ தொடர்பாக, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், "பொது இடங்களில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"என சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

அதன் அடிப்படையில், 'சென்னை டாக்' யூ-ட்யூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் குமார் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மூவர் மீதும் 'பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்', 'பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்' உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூ-ட்யூப் சேனல்களில்கல்வி, வேலை வாய்ப்பு, சமையல், பொழுதுபோக்கு என பல்வேறு வீடியோக்களைப் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், சில யூ-ட்யூப் சேனல்கள், தங்கள் வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக சில கேள்விகளைத் தரம் தாழ்ந்துகேட்கின்றன. இதனைத் தடுத்து சம்மந்தப்பட்ட யூ-ட்யூப் சேனல் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai police Youtube
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe