/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SZGFSFSFSF.jpg)
சென்னையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்துவந்த டாக்டர் திருவேங்கடம் காலமானார்.
சென்னை வியாசர்பாடியில் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர் திருவேங்கடம் காலமானார். 70 வயதான அவர் வியாசர்பாடியில் அவருடைய தொடக்க காலத்தில் சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களிடம் இரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தார்.
பின்னர் பல ஆண்டுகள் கடந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மனதில் கொண்டு, இரண்டு ரூபாயாக பெற்றுக்கொண்டிருந்த சிகிச்சை கட்டணத்தை ஐந்து ரூபாய் ஆக உயர்த்தினார். இப்படிஎளிய மருத்துவ சேவையினால்அப்பகுதி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த டாக்டர் திருவேங்கடம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.அவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ரூபாய் டாக்டர் திருவேங்கடத்தின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)