முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்த சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் இணையதள பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர் தங்கமணி ஆகியோரை அவதூறாக பதிவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/900_5.jpg)
இதனை கண்ட கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ரியோஷ்கான், கோவை சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சுதர்சன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து சென்னையிலிருந்த சுதர்சனை போலீசார் கைது செய்தனர்.
சுதர்சனோ தனது நண்பர் ஒருவர் அதிமுக குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதனால் தான் அதிமுக பிரமுகர்களைப் பற்றி பதிவிட்டதாக போலீஸிடம் தெரிவித்திருக்கிறாராம்.
சுதர்சனின் நண்பரை கைது செய்ய திட்டமிட்டுள்ள போலீஸார், சுதர்சனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையலடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)