/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain hggh_14.jpg)
தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மன மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். தமிழகத்தில் இது மழைக்கான காலமாக உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் நல்ல மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)