Advertisment

சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் திறப்பு!

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது.கண்டலேறு அணையிலிருந்து முதல் கட்டமாக சென்னைக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் திறக்கப்படும் நீர் 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர முதல்வருக்குதமிழக முதல்வர் 8 டிஎம்சி நீர் தரக்கோரி கோரிக்கை விடுத்தநிலையில் ஆந்திர அரசு 5 டிஎம்சி வரை மட்டுமேதண்ணீர் திறக்க வாய்ப்பு.

Advertisment

chennai water demand krishna river opening

தற்போது 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாலைக்குள் 2,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisment
Andhra Pradesh Chennai krishna water OPENING Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe