/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vehicle434322.jpg)
சென்னை மதுரவாயலில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆவடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது மகன்கள் ஆதிரன், கௌசிக் ஆகியோரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். மதுரவாயல் அருகே சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற மூன்று சக்கர சைக்கிளின் மீது இரண்டு சக்கர வாகனம் மோதியது. இதில் இரண்டு சிறுவர்களும் சாலையில் தவறி விழுந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம், சிறுவர்கள் மீது ஏறியது. இதில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cycle343.jpg)
விபத்தில் தந்தை செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. தன் கண்முன்னே மகன்கள் உயிரிழந்து போனதைக் கண்டு செல்வம் கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, சரக்கு வாகன ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)