Advertisment

கருவைக் கலைத்தால் திருமணம் செய்துகொள்கிறேன்; இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன்

chennai vadapalani police filed young woman love issue case 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளைஞர் ஒருவர் ஏமாற்றியதாகஇளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

சென்னையில் உள்ள உறவினர்வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவருக்கு அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுந்தரமூர்த்தி இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மேலும்,அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் சுந்தரமூர்த்தியிடம் இதுகுறித்துதெரிவித்த இளம்பெண்தன்னை திருமணம் செய்துகொள்ளவலியுறுத்தியுள்ளார். அதற்குசுந்தரமூர்த்திகருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணின் கருவைக் கலைத்துள்ளார்.

Advertisment

கருவைக் கலைத்தபின்னரும்சுந்தரமூர்த்தி இளம்பெண்ணைதிருமணம்செய்து கொள்ளவில்லை. மேலும் இதுகுறித்து சுந்தரமூர்த்தியின்பெற்றோரிடம் தெரிவித்த போதுஅவர்களும் இந்தஇளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.இதுகுறித்துவடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத்தொடங்கி உள்ளனர்.

lovers police Vadapalani Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe