Advertisment

ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் உடல்!!! ரயில்வே போலீசார் விசாரணை

Chennai trichy railway track incident... Railway police investigation

சென்னை - திருச்சி செல்லும் ரயில் பாதை தண்டவாளத்தில் வாலிபர் உடல் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள இரையூரைச் சேர்ந்தவர். இவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் நடமாடி உள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை தண்டவாளத்தின் ஓரம் தலை நசுங்கிய நிலையில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் அவரது உடல் கிடந்துள்ளது. இவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இளைஞரான கிருஷ்ணமூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Advertisment

எனவே இவரது மரணம் எப்படி நிகழ்ந்தது தற்செயலாக செல்லும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவரது ஊருக்கும் ரயில்வே லைனுக்கும் சுமார் 200 மீட்டர் தூரம் இருக்கும் எனவே கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தோடு ரயில்வே லைனில் படுத்திருந்தாரா அல்லது ரயில் வரும்போது கவனிக்காமல் ஓரமாக நின்று கொண்டிருக்கும்போது அடிபட்டு இறந்தாரா என பல கோணங்களில் போலீசார் விசாரண மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

Youth trichy Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe