சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன. இன்று (24/03/2020) மாலை 06.00 வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறிய நிலையில் தற்போதே நிறுத்தப்பட்டுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
மேலும் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே தற்போது அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் குறைந்த தொலைவில் உள்ள காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, திருவண்ணாமலை வரை மட்டுமே பேருந்துகள் செல்கிறது.
நேற்று (23/03/2020) மாலை முதல் பரபரப்பாக காணப்பட்ட சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.