கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று இரவு 12.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் பங்க்குகள், ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஊரடங்கு உத்தரவால் தேவையின்றி பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி சிலர் இரு சக்கர வாகனங்களில் சாலையில் சுற்றுகின்றனர். அப்போது ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் அவர்களை பிடித்து வித்தியாசமான முறையில் தண்டனை அளித்தும், அவர்களுக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னை ஸ்பென்சர் சிக்னலில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரஷீத், ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு வாகன ஓட்டி அவரது காலில் விழுந்தார்.
அதேபோல்விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றிய 4 வாகன ஓட்டிகளுக்கு தோப்புக்கரண தணடனையை காவல்துறையினர் அளித்தனர்.