Advertisment

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு!

Chennai Traffic Police Important Notice for drivers 

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், ‘காவலர் நீத்தார் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாளை (21.10.2024) காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது எனச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு - அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிர்த் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

Advertisment

எம்.ஆர்.டி. எஸ், ஆர். கே. குறுக்குச் சாலை சந்திப்பை (MRTS X R.K.Salai Jn) தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. காவலரின் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில் மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் எம்.ஆர்.டி. எஸ் சாலை வழியாக சென்று - லாயிட்ஸ் சாலை காமராஜர் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (21ஜி) ராயப்பேட்டை 1 பாயின்ட் மியூசிக் அகாடமி பாயின்ட் டிடிகே சாலை - இந்தியன் வங்கி சந்திப்பு - ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஜி.ஆர்.ஹெச். பாபிண்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

Advertisment

கதீட்ரல் ரோடு லைட் ஹவுஸ் நோக்கி வரும் மாநகர பேருந்து (27டி) வி.எம். தெருவில் திருப்பிவிடப்பட்டு லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - டி ஸ்லிவா சாலை - பக்த்வச்சலம் சாலை - டாக்டர் ரங்கா சாலை - பீமனா கார்டன் சந்திப்பு - சி.பி. ராமசாமி சாலை சீனிவாசன் தெரு - ஆர். கே. மடம் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

traffic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe