நாளை முதல் முக கவசம் கட்டாயம்... சென்னை மாநகராட்சி உத்தரவு

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

chennai

தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயமாகிறது,சென்னையில் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கோவையிலும் வீட்டைவிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் திருப்பூரிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Chennai corona virus Mask
இதையும் படியுங்கள்
Subscribe