Advertisment

சென்னையில் வங்கி ஊழியருக்கு அரிவாள் வெட்டு; பட்டப்பகலில் பயங்கரம்!

Chennai TNagar Burgit Road Private Bank incident

சென்னைதியாகராயநகரில்உள்ளபர்கிட்சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வங்கி இன்று (19.12.2024) வழக்கம் போல்செயல்பட்டுகொண்டிருந்தது. அப்போதுவிக்னேஷ்உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் பலரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மதியம் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அங்கிருந்ததினேஷின்காதில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தினேஷ் வலியால் அலறியுள்ளார்.

Advertisment

அப்போது அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கத்தியால் கத்தியால் வெட்டிய நபரை மடக்கிப்பிடித்துள்ளனர். மேலும் இது குறித்துதியாகராயநகர்போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார்இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் வங்கி ஊழியர் தினேஷ்தியாகராயநகரில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இது குறித்துபோலீசார்நடத்திய முதற்கட்ட விசாரணையில் வங்கிக்குள் நுழைந்து ஊழியரைக் கத்தியால் வெட்டியது அந்த வங்கியின் முன்னாள் ஊழியரான புதுக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பட்டப்பகலில் வங்கி ஊழியர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

police incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe