சென்னையில் தெருவோரம் பழக்கடை நடத்திய பெண் வியாபாரி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள சன்னதி தெருவில், கவுரி என்ற பெண் பழக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பர்மா சேகர் என்பவர் கவுரியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அப்போது கவுரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பர்மா சேகர் கவுரியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரி மீதும் பர்மா சேகர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்ப முயன்ற பர்மா சேகரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.