Advertisment

ரமலான் பண்டிகை - வீடுகளிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்

Advertisment

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டுவதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இதனால், மசூதிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Chennai thiruvallikeni
இதையும் படியுங்கள்
Subscribe