Advertisment

சென்னை அருகே மாணவர் மீது துப்பாக்கிச்சூடு!

சென்னை தாம்பரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச்சூடு.

Advertisment

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முகேஷ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இதே பகுதியில் உள்ள தனது நண்பர் விஜய் வீட்டிற்கு, சக நண்பர் உதயாவுடன் சென்றுள்ளார். தற்போது சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த வீட்டில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது முகேஷ் நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்தார். மற்ற இரு மாணவர்களும் தப்பி சென்று விட்டனர்.

Advertisment

chennai thambaram  polytechnic student incident

மாணவனை மீட்ட பொதுமக்கள் வேங்கடமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மாணவர்கள் இருவரை தேடி வருகின்றன.

incident students polytechnic tambaram Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe