Advertisment

7 வருஷமா காதலிச்சோம்... அந்த பழக்கத்தை கைவிட சொல்றா... காதலியை தீர்த்துக்கட்ட முயன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்...

சென்னை தேனாம்பேட்டை பருவா நகர் பி- பிளாக்கை சேர்ந்தவர் வெங்கடேசன் (26). நேற்று மாலை தேனாம்பேட்டை மகளிர் கல்லூரி அருகே நின்றுகொண்டிருந்த இவர் தனது பைக்கில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து அருகில் உள்ள போலீஸ் பூத் மீது வீசிவிட்டு தப்பியோடினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

chennai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேசனை உடனடியாக கைது செய்தனர்.

Advertisment

வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்துள்ளார் வெங்கடேசன். இவர் தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் மேலும் போலீசாரிடம் கூறியதாவது, எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதை அவர் கைவிட சொன்னார். ஆனால் என்னால் அந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனால் எனது காதலி, நான் வேறொரு நபரை காதலிக்க போறேன் என்று கூறினார். மேலும் என்னிடம் இரண்டு நாட்களாக பேசவில்லை. எனக்கு கிடைக்காத பெண், வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று யோசித்தேன். பெட்ரோல் குண்டு தயாரித்து அவளை கல்லூரி வாசலிலேயே தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி மாலையில் கல்லூரி முன்பு பெட்ரோல் குண்டுடன் காத்திருந்தேன். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவள் வரவில்லை. குடிபோதையில் இருந்த நான் ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல்தான் போதையில் பெட்ரோல் குண்டை வீசி எறிந்தேன். அது போலீஸ் பூத் மீது விழும் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

police person young Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe