Advertisment

சென்னை அணி வீரர்கள் கருப்பு துணியை கையில் கட்டி விளையாட வேண்டும்: ரஜினிகாந்த் வலியுறுத்தல்!

சென்னை அணி வீரர்கள் கருப்பு துணியை கையில் கட்டி விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழ்நாடே காவிரிக்காக போராடி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், ஒரு உற்சாக கொண்டாட்டமாக ஐ.பி.எல்-ஐ நடத்தினால் சங்கடம் தான். ஐபிஎல்-ஐ நிறுத்தக்கோரி அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

ஐ.பி.எல் நடத்தாமல் இருந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால், தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த சென்னை அணி வீரர்கள் கருப்பு துணியை கையில் கட்டி விளையாட வேண்டும். அப்படி செய்தால் அதனை இந்தியா முழுவதும் பார்ப்பார்கள் அது அனைவரிடமும் சென்று சேரும். அதற்கு பிசிசிஐ, ஐ.பி.எல் அதிகாரிகள், சென்னை அணி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால் அதனை பார்க்க செல்லும் இளைஞர்கள், மாணவ - மாணவிகள் தமிழக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அங்கு சென்றால் நல்லது என அவர் கூறியுள்ளார்.

rajinikanth cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe