tt

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்து சென்னையில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

Advertisment

இதனை அவ்வப்போது போலீசார் வாகன சோதனையின்போது பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் சோதனையிட்டபோது, 200க்கும் அதிகமான மதுபானங்கள் சிக்கின.

Advertisment

இதுதொடர்பாக அந்த காரில் இருந்த 119-வது வட்ட அதிமுக செயலாளர் பேனர் குரு என்பவரை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.