Skip to main content

சென்னை மதுப்பிரியர்களுக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

  chennai Tasmac not open - police order to chennai people

 

தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளநிலையில், தமிழக அரசு உத்தரவுப்படி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் இன்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வதால் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பதற்காக, சென்னையின் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளுக்குச் சென்று சென்னையைச் சேர்ந்தவர்கள் மது வாங்கி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்