சென்னை தரமணிகம்பர் தெருவைச்சேர்ந்தவர்சாந்தகுமாரி (வயது 56). இவருக்கு இரு மகள்களும்ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாகவசித்து வருகின்றனர். சாந்தகுமாரியின் மேல் வீட்டில் ஸ்ரீஜா (வயது 20)என்ற இளம்பெண்ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மேலும், சாந்தகுமாரியின் இளைய மகளான உஷா தனது தாயாரின்வீட்டிற்குபக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராத தனது தாயாரான சாந்தகுமாரியைபார்த்து விட்டு வருமாறு தனது மகனிடம் கூறியுள்ளார்.அப்போது அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்தநிலையில் இருந்ததோடு தனது பாட்டி கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷாவின் மகன்,இது குறித்துஉஷாவிடம்கூறியுள்ளார். உடனடியாக உஷா தனது தாயாரை சென்று பார்த்தபோது தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் இது குறித்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
மேலும், வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தபோது, பீரோவில் இருந்த 3.5 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீஜா வாடகைக்கு குடியிருந்து வரும் மேல் வீட்டை ஒருவருக்கு 3.5 லட்சத்துக்குகுத்தகைக்கு விட முடிவு செய்து அவரிடம் இருந்து பணத்தை பெற்று தனது வீட்டில் இருந்த பீரோவில் சாந்தகுமாரி வைத்திருந்தார். மேலும் ஸ்ரீஜாவை வீட்டில் இருந்து காலி செய்யவும் கூறிஉள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டைகாலி செய்த ஸ்ரீஜா சாந்தகுமாரியின் வீட்டில் புகுந்து பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதை பார்த்த சாந்தகுமாரிக்கும் ஸ்ரீஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீஜா சாந்தகுமாரியைகீழே தள்ளிவிட்டதில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். பின்னர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்துஸ்ரீஜா தப்பிச் சென்றது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தரமணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.