தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பரவலாக மழை இருக்கும் என்றும், 16 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisment

chennai surrounding heavy rain peoples happy

இந்நிலையில் சென்னைமாநகரில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. மாநகரில் மாம்பலம்,அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கேகே நகர், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணாநகர், வாவின் உள்ளிட்ட பகுதிகளிலும்பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment