வரும் 7ஆம்தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்ததாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனதெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு அண்மையில் பல்வேறு தளர்வுகளை வெளியிட்டிருந்தது. ஆனால், அதில் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.பயணிகள் மத்தியில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து சென்னையில் பகுதியளவு புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில்அது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனதெற்கு ரயில்வேவிளக்கமளித்துள்ளது.