நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா உட்பட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. அதன் தொடர்ச்சியாக தேனி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள உதித் சூர்யாவின் தந்தை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

chennai student udit surya Impersonation in the Need Exam dmk mk stalin tweet

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,+2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும், 'நீட்' (NEET) கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்! என்று பதிவிட்டுள்ளார்.