Advertisment

சென்னை மாணவி கொலை வழக்கு; போலீஸ் கமிஷனர் புதிய உத்தரவு

Chennai student sathya rail case; Chennai Police Commissioner new order!

சென்னை, கிண்டி பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற இளம்பெண்ணைகடந்த சில தினங்கள் முன்பு சதீஷ் என்ற இளைஞர் ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தலைமறைவானசதீஷ் காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.

Advertisment

இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை மதுபானத்தில் விஷம் கலந்து குடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ்சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Advertisment

இதனையடுத்துஇந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சதீஷிடம் பல்வேறு வகையான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியை ரயிலில் தள்ளிக் கொன்ற சதீஷ் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. குண்டாஸ் போடுவதற்கு முதலில்சி.பி.சி.ஐ.டி பரிந்துரை செய்தது. இதன் பேரில் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் கீழ் சதீஷ் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

sathish Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe