Advertisment

சென்னை சிலை கடத்தல் வழக்கு;அனைவரும் நேரில் ஆஜராக நோட்டீஸ்!!

சென்னையில் பழமையான சிலைகளை பதுக்கி வைத்திருந்தது வழக்கில் 14 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

Advertisment

இதில் 11 பேர் வழக்கறிஞர் மூலம் அதற்கான மனுவை அளித்தபோது, அதனை போலீஸார் ஏற்க மறுத்து, சம்மன் பெற்றுக் கொண்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisment

statue

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர்ஷா, பழமையான சிலைகளை விற்பனை செய்தது தொடர்பாக சிலைகடத்தல் மன்னன் தீனதயான் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து அவரது வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பழமையான கலைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கியதூண்கள், உலோகசிலைகள், கற்சிலைகள் என 267 சிலைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரன்வீர்ஷாவின் தோழி சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட்டைச் சேர்ந்த கிரண்ராவ் என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் 23 கற்சிலைகள் பூமிக்கடியில் புதைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ரன்வீர்ஷா, கிரண்ராவ் மற்றும் அவர்களின் பணியாளர்கள் செந்தில்விநாயகம், ரஞ்சித் சன்வால், அருண்கிறிஸ்டி, ராஜேஷ், அஜி, தயாநிதிஸ்வைன், பிரகாஷ், சிவா, தேவேந்திரன், சதிஷ், ராஜி்வ்தேவ், நரேன் உள்ளிட்ட 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 9 ம் தேதி நேரில் ஆஜராகசம்மன் அனுப்பியிருந்தனர்.

statue

இதற்கிடையில் கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகமாக மாற்றி அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். நேற்று காலை முதல் அந்த அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஏஜி.பொன்மாணிக்கவேல், டிஎஸ்பி சுந்தரம் மற்றும் போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிரண்ராவ் பணியாளர்கள் சார்பில் 11 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் சரவணன், செல்வம் ஆகியோர் "கும்பகோணம் அலுவலகம் தொலைவில் உள்ளதால், எங்களுக்கு சென்னையில் விசாரித்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என மனுக்களை வழங்க வந்தனர்.

அவர்களிடம் டிஎஸ்பி சுந்தரம், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் கும்பகோணம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அவர்கள் இங்கு தான் ஆஜராக வேண்டும். எனவே, நீங்கள் வழங்கும் மனுவை நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என வழக்கறிஞர்களிடம் தெரிவித்து, அவர்களை திருப்பி அனுப்பினார். பின்னர் நரேன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஆஜராகினார். அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

statue

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி பிஏ.சுந்தரம் செய்தியாளர்களிடம் "சென்னையில் ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது வீட்டில் பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களிடமும், அவரை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்த 14 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

கும்பகோணம் அலுவலகத்தில்தான் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறி்ப்பிட்டுள்ளோம். ஆனால் சிலர் கும்பகோணம் வரமுடியவில்லை என மனுவாக வழக்கறிஞர் மூலம் அளிக்க வந்தனர். அதனை நாங்கள் பெறாமல் நிராகரித்துவிட்டோம். இன்று (9 ம் தேதி ) வர முடியாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். இதில் நரேன் என்பவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Investigation IG Ponmanikavel Aaivu statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe