
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர் விடுதி கட்டிடத்தில் இருந்து மருத்துவர் ஒருவர் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கெலை செய்து கொண்டவர் முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன் எனத் தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 25. உடுமலையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இரவு மற்றும் பகல் ஆகிய இரு நேரங்களிலும் பணியாற்றி வந்ததாகவும், நேற்று இரவு ஒன்றரை மணி வரை பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தங்கியிருந்த விடுதி மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இறந்துள்ளார்.
இவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்ததாகவும், இவர் வேறொரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா எனப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டும் பணிச்சுமையைக்குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)