காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தின. அதில் சென்னை அண்ணாசாலையில் நடந்த போராட்டத்தில் மக்களுக்கு இடையூறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் விசாரணைக்கு நேரில்ஆஜராகவில்லை.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாஹிருல்லா, திருநாவுக்கரசர் உள்பட 7 பேர் டிசம்பர் 26- ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.