சென்னை சவுகார்பேட்டை, விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில்சந்த். இவர் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கு, புஷ்பா பாய் என்ற மனைவியும், ஷீதல் என்ற மகனும் உள்ளனர். மகன் ஷீதல், மனைவியைப் பிரிந்து பெற்றொருடனே வாழ்ந்து வருகின்றார். மகள் பிங்கி, திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு போன் செய்து யாருமே போனை எடுக்காததால் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சோபாவில் ரத்த வெள்ளத்தில் நெற்றிபொட்டில் துப்பாக்கியால் சுடபட்ட நிலையில் அவர்கள் மூவரும் கொலை செய்யப்படிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிங்கியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள், போலீஸ்சாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸார் மூன்று பேரின் உடலையும் கைபற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ராஜுகாந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷ்னர் அருண், பூக்கடை துணை கமிஷ்னர் மகேஷ்வரன் அகியோர் விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தலில்சந்த் கடந்த 30 வருடத்துக்கு முன் தொழில் செய்ய குடும்பத்துடன் சென்னை வந்தவர். பைனான்ஸ் தொழில் செய்துவந்துள்ளார். குடும்பத்தில் சொத்து பிரச்சனையும் உள்ளது. அதனால் கொலை செய்யப்பட்டாரா, அல்லது பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட தகராரில் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஷீதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் நெற்றிபொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. எனவே தூரத்தில் இருந்து துள்ளியமாக துப்பாக்கியால் நெற்றி பொட்டில் சுடும் அளவு துப்பாக்கியை கையாளும் நபராக இருக்க வாய்ப்பில்லை. எனவே, அருகில் இருந்தபடி நெருக்கமாக துப்பாக்கியை நெற்றியில் வைத்து சுடபட்டிருக்கலாம் என்ற தடையவியல் நிபுணர்கள் பார்வையில் போலீஸ்சார் விசாரித்து வருகின்றனர்.
சினிமாவில் வருவது போல இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் சென்னை மாநகரையே பரபரப்பு ஆகியுள்ளது. கடந்த மாதம் இதே பகுதி அருகே கொய்யா சையது என்பவர் அவரின் உறவினரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/q-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/q-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/q-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-11/q-1.jpg)