சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் சென்னை கன்னியாபுரத்தைச் சேர்ந்த சசிகலா, தனது 11 வயது மகன் தனிஷூடன் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் தனிஷ் பாபு எஸ்கலேட்டரில் சிக்கினார். இந்த விபத்தில் அவரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.