சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் உள்ள கிராமிய கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில் 18 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கலை நிகழ்ச்சிகளை தொகுத்து நடத்தி வருகின்றனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பங்காற்றி வருகின்றனர். மொத்தமாக 75 குழுக்களாகப் பிரிந்து 50 கலை வடிவங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா நிகழ்வில் பங்கேற்றுள்ள கிராமிய கலைஞர்கள் 1500 பேருக்கும் ஒருநாள் சம்பளம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.