ADVERTISEMENT

சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை வழக்கில் இன்று தீர்ப்பு!

08:48 AM Dec 08, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் இன்று (08/12/2020) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், அரியானூரில் தொடங்கி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக தாம்பரம் வரை 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள், அரசியல் கட்சிகள் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், நில உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கான அறிவிப்பாணையை 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் 8- ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் ரத்து செய்து, இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்தில் திருப்பி தரவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று (08/12/2020) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT