சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அருகே சைதாப்பேட்டை பஜார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி மையத்தையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Advertisment

chennai saidapettai dmk president mk stalin speech

நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், "திமுக எம்எல்ஏக்கள் தங்களுடைய தொகுதிகளில் பயிற்சி மையங்களைத் தொடங்க வேண்டும். கருணாநிதியின் உழைப்பு, அவர் ஆற்றிய பணிகளை எடுத்துச் சொல்ல அவரது சிலைகளை திறந்து வைக்கிறோம். ஆட்சியில் இருப்பவர்களே உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவார்கள்; அந்த வரலாறு மாறியுள்ளது". இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisment