சென்னை ராயபேட்டை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள புதுகல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய் கிழமை மதியம் 2 மணி அளவில், ஒரு இளம் பெண் ஆடை இல்லாமல், மயக்கநிலையில் தடுமாறிய நிலையில் நடந்து சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினர்.

Advertisment

road

அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த ராயபேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் விரைந்து வந்து, அவர் வைத்திருந்த மாற்று சட்டையை உடனடியாக அந்த இளம் பெண்ணுக்கு போர்த்திவிட்டார். பின்னர், அருகில் இருந்த பெண்களின் உதவியுடன் துப்பட்டாவை போர்த்தி, ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

Advertisment

அந்த பெண் அதிர்ச்சி அடைந்தது போல, மாறிமாறி தெலுங்கு மொழியில் பேசியுள்ளார். உடனே மகளிர் போலீசாருக்கும், சமூகநலத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தற்போது உடன் உள்ளனர்.

அந்த பெண் அலங்கோலமாக வந்ததன் காரணம் என்ன? போதை பொருட்கள் ஏதாவது கொடுத்து அந்த பெண்ணை சமூக விரோதிகள் அத்துமீறல்கள் ஏதேனும் நடந்துள்ளதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண் எங்கிருந்து வந்தார் என்பதை அறிய சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பெண் வயறு வலியால் அழுது துடித்ததால் தீவிர மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது, சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய பின் முழுவிவரமும் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

Advertisment