சென்னையில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

CHENNAI ROWDY INCIDENT POLICE

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் காவல் ஆய்வாளர் நடராஜன். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும் அயனாவரத்தில் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்குமுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 18- ஆம் தேதி தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை பிடிக்க முயன்ற காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீச்சில் இறந்தார். இந்த நிலையில் ரவுடிகளால் மேலும் ஒரு காவலர் உயிரிழக்காமல் தடுக்கவே சங்கரை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai incident police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe