சென்னை வண்ணாரபேட்டை மற்றும் சென்னையின் பல பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த டோரி பாபு என்ற பிரபல கொள்ளையன் மற்றும் அவனது கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ereref.jpg)
மணலியில் வசித்துவரும் டோரி பாபு என்ற இவனின் மீது சேத்துப்பட்டு,அயனாவரம், காசிமேடு போன்ற காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் இருந்துவருகிறது. வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் இடத்திற்கு தகுந்தாற்போல் ஆட்களை சேர்த்துக்கொண்டு பல திருட்டுகளில் ஈடுபட்டு வந்த டோரி பாபு இதுவரை ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி வெளிவந்துள்ளான்.
அதாவது காலை வேளைகளில் 9 மணியிலிருந்து 11 மணி சுமாருக்கு நேரம் பார்த்து, ஆள் இல்லாத வீடுகளில் திருடுவதை பழக்கமாக கொண்டுள்ளான். அதேபோல் அலாரம் வைத்து சரியான குறிப்பிட்டநிமிடத்தில், நேரத்தில் கொள்ளையடிப்பதும் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kollai.jpg)
இப்படி இருக்க பழைய வண்ணாரபேட்டையில் இரும்புகம்பி வியாபாரி அருணாச்சலம் என்பவரது வீட்டில் 50 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் பணம் திருடுபோன வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதலில் அந்த திருட்டை நடத்திய டோரி பாபு மாற்றும் அவனது கூட்டாளிகள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)