Skip to main content

சுயஊரடங்கு கடைபிடிப்பு... வெறிச்சோடிய சாலைகள்! (படங்கள்)

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கூட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


கரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. 
 

இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் செயல்படுகின்றன. 
 


குறிப்பாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டனர். மேலும் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் கடற்கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்