chennai

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரிச்சி தெருவில் ஒரு பெண் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசியதுடன், அவரையும் தாக்கியது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

chennai

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண் ரவுடி ஒருவரின் 3வது மனைவி என தெரிய வந்ததாகவும், தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

chennai

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை மாமல்லபுரத்தில் நாளை நடக்க உள்ளதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பட்டபகலில் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற நிகழ்வால் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் சோஃபியா ஜோசப் ஆய்வு செய்தார்.