Chennai, restrictions announced !!

ஜூலை 6 முதல் பொதுமுடக்கம் சென்னையில் முடிவடையும் நிலையில், சில தளர்வுகளைமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பார்சல்கள் வழங்கலாம். தொலைபேசி மூலமும்ஆர்டர் செய்து வீடுகளுக்கு ஹோம் டெலிவரிமூலம் உணவை பெறலாம்.ஜூலை 6 முதல் சென்னையில் தேநீர் கடைகள் 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.

Advertisment

காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி.வணிக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கலாம். மேலும் கடந்த மாதம்19ஆம் தேதிக்குமுன்பு என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள் இருந்ததோ அந்த தளர்வுகள்பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முகக்கவசம் அணிய வேண்டும்அதேபோல் பெரிய கடையாக இருந்தாலும், சிறிய வணிக கடைகளாகஇருந்தாலும் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.