சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆலோசனை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் கூறுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் அம்மா பேரவை மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk4_0.jpg)
கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "என்னைப்போல் ஜெ. பேரவையினர் தன்னலமற்று பணி செய்தால் உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்" என்றார்.
Follow Us