Advertisment

சென்னை புழல் சிறை வார்டன் திருச்சியில் உயிரிழந்தது எப்படி? 

trichy

சென்னை புழல் சிறையில் வார்டனாக பணிபுரிந்தவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மாயகிருஷ்ணன். சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார்மாயகிருஷ்ணனின். அவரது மனைவி மற்றும் குழந்தைகள்குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில் கரோனா நேரத்தில் பணியில் இருந்தவர் விடுமுறை எடுத்துக்கொண்டு மதுரைக்குச் செல்வதாக டூவிலரில் சென்னையில் இருந்து கிளம்பியிருக்கிறார்.

Advertisment

சென்னையில் இருந்து டூவிலரில் வந்த மாயகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து அங்கே திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை பார்ப்பதற்காக சுப்ரமணியபுரம் வழியே சென்றார்.

அப்போது சென்டர் மீடியனில் மாயகிருஷ்ணன்ஓட்டிச்சென்ற பைக் மோதி அங்கிருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால்,சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்மாயகிருஷ்ணன்.

இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

puzhal trichy Warden
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe