/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_11.jpg)
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அருண் மாடியா (வயது 27) என்பவர் சென்னை புழலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவரும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பென்னிட்டா பெகாரி என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் சென்னை புழலில் உள்ள நீலகண்டர் தெருவில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையில் அவ்வப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,நேற்று மாலை வழக்கம்போல் இவர்கள்இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அருண் மாடியா வீட்டிலிருந்து வெளியில் சென்று உள்ளார். அப்போது தனிமையிலிருந்தபென்னிட்டா பெகாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு ஸ்டான்லிஅரசு மருத்துவமனைக்குபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இத்தம்பதியருக்குதிருமணமாகி ஒரு வருடமேஆவதால் இதுகுறித்து தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் விசாரணை செய்து வருகிறார்.
Follow Us