தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக சார்பில் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக, திராவிடர் விடுதலை கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட இயக்கங்கள் பங்கேற்கின்றன.
இன்று வடசென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஓட்டேரியில் சேகர்பாபு தலைமையிலும், கொருக்குப்பேட்டையில் மருதுகணேஷ் தலைமையில் ரயில் மறியலும், புழல் நாராயணன் சார்பில் சாலை மறியலும், திருவொற்றியூரில் சங்கர் தலைமையில் சாலை மறியலும் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.