திருவள்ளுவர் அவமதிப்பு விவகாரம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் போராட்டம்... 

நவம்பர் நான்காம்தேதி அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் மீது சாணி வீசியும், கருப்பு துணியால் கண்களை மூடியும் திருவள்ளுவரை அவமதிக்கும் செயலை புரிந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாஜக கட்சியினர் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திருவள்ளுவர் காவி உடை அணிந்ததை போல் சித்தரித்த படத்தினை பதிவிட்டு வருவதை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கரா மற்றும் இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

chennai protest

இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

protest TIRUVALLUVAR
இதையும் படியுங்கள்
Subscribe