Advertisment

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு...!

police

அண்மைக்காலமாக காவல் நிலையங்களில் விசாரணை கைதியாக அழைத்து செல்லப்படுபவர்கள் உயிரிழப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுகிறது.அண்மையில் சென்னையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு விக்னேஷ் என்ற நபர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை செய்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe