
காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி ஓட்டேரி போலீசார் விசாரணைக்காக ஆகாஷைஅழைத்துச் சென்றனர். இந்நிலையில் விசாரணையின்போதுகாவல் நிலையத்தில் ஆகாஷ் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆகாஷ் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆகாஷ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய தாக்கியதால் ஆகாஷ் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அண்மையில் இதேபோல்கீழ்பாக்கத்தைசேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டுகாவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தநிலையில், இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)