தமிழகத்தில் கரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ள அனைவரும் தாங்கள் பணியாற்றிய போலீஸ் நிலையங்களிலேயே பணிகளை தொடங்கி உள்ளனர்.

Advertisment

Advertisment

இந்தநிலையில் ஆயுதப்படை போலீசார் 60 பேர் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணியை தொடங்க உள்ளனர். இதனையொட்டி சென்னை எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 60 போலீசாரையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

காவல்துறையின் கரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரை கண்காணிக்க காவல் துறையில் சிறப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.